Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோரிக்கைகளுக்கு நடவடிக்கை இல்லை அ.தி.மு.க., கவுன்சிலர் குமுறல்

கோரிக்கைகளுக்கு நடவடிக்கை இல்லை அ.தி.மு.க., கவுன்சிலர் குமுறல்

கோரிக்கைகளுக்கு நடவடிக்கை இல்லை அ.தி.மு.க., கவுன்சிலர் குமுறல்

கோரிக்கைகளுக்கு நடவடிக்கை இல்லை அ.தி.மு.க., கவுன்சிலர் குமுறல்

ADDED : ஜூலை 18, 2024 12:09 AM


Google News
மணலி, மணலி மண்டலக் குழு கூட்டம், நேற்று முன்தினம் மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஸ்ரீதரன்:

மண்டலக் குழு கூட்டத்தில், என்ன பேசினாலும் நடவடிக்கை இல்லை. மிகுந்த வருத்தமாகவும், சங்கடமாகவும் உள்ளது.

எனது வார்டில், அதிக சேதமான மின்கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. தன்னிச்சையாக செயல்படும், உதவிக் பொறியாளரை மாற்றக்கோரி வருகிறேன்.

நடவடிக்கை ஏதுமில்லை. எங்கள் வேதனையை புரிந்துகொள்ளுங்கள். வார்டு பணிகளை மேற்கொள்ள, உதவி பொறியாளர் - கவுன்சிலர் என்ற இருசக்கரங்கள் சரியாக ஓட வேண்டும்.

22வது வார்டு, காங்., கவுன்சிலர் தீர்த்தி:

பள்ளி கட்டடம் திறப்பு விழா நடக்கிறது. இதில், மாநகராட்சி துாய்மை பணியாளர் பணி செய்வதில்லை. 'பயோ காஸ்' பிளான்ட்டால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. பாதிப்பு அதிகம் உள்ளது.

மழைநீர் வடிகால் பணிக்குப்பின், புதைமின் வடங்கள் சரிவர புதைக்கப்படவில்லை. மின் பெட்டிகளால் ஆபத்து உள்ளது. மின்வாரியத்தால் தான் எங்களுக்கு கெட்ட பெயர்.

தொடர்ந்து, 17வது வார்டு, தீயம்பாக்கம், 15வது வார்டு, மணலிபுது நகர், 19வது வார்டு, மஞ்சம்பாக்கம், நகர்ப்புற நல மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் கிடையாது என, குற்றச்சாட்டை கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

சீரமைப்பிற்கு ஒப்புதல்

கூட்டத்தில், 16, 18வது வார்டில், 11.20 கோடி ரூபாய் செலவில், குடிநீர், பாதாள சாக்கடை பணிகளுக்காக வெட்டப்பட்ட, 164 சாலைகளை சீரமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேறின.வார்டு 17ல், எட்டு மயானங்களை, 1.76 கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தும் பணி; 18வது வார்டில், ஐந்து பம்பிங் ஸ்டேஷன், 1.64 கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணிக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாடசாலை தெரு - காமராஜர் சாலை இணையும் இடத்தில், தாசில்தார் அளித்த விபரங்களின்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட, 246 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us