/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூவம் கரையோரத்தில் 'ரிவர் வாக்' பூங்கா கூவம் கரையோரத்தில் 'ரிவர் வாக்' பூங்கா
கூவம் கரையோரத்தில் 'ரிவர் வாக்' பூங்கா
கூவம் கரையோரத்தில் 'ரிவர் வாக்' பூங்கா
கூவம் கரையோரத்தில் 'ரிவர் வாக்' பூங்கா
ADDED : ஜூலை 19, 2024 12:20 AM
சென்னை, ''அமெரிக்காவின் சான் அன்டோனியாவில் உள்ள 'ரிவர் வாக்' பூங்கா போல, கூவம் கரையோரத்தில் அமைக்கப்படும்,'' என, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது:
தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், சான் அன்டோனியா நகரில் சிலைகள் வைக்கப்படும். அதேபோல், அந்நாட்டின் கலாசார சிலைகள் சென்னையிலும் அமைக்கப்பட உள்ளது.
மேலும், அந்த நகரம் நீர்நிலைகளை சிறப்பாக மேம்படுத்தி உள்ளது. அங்குள்ள ரிவர் வாக் பூங்கா போல, கூவம் கரையோரத்தில் ஒரு பகுதியில் அமைக்கப்படும். மேலும் நடைபாதை, மனதை கவரும் வகையிலான பசுமை பூங்கா உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாம்பலம் கால்வாய் மட்டுமல்லாமல், கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகள், செப்., மாதத்திற்குள் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டாலும், அதை உடனடியாக மாநகராட்சி அகற்றும் என்ற உத்தரவாதம் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.