/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 25,000 பேர் கல்வி சுற்றுலா மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 25,000 பேர் கல்வி சுற்றுலா
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 25,000 பேர் கல்வி சுற்றுலா
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 25,000 பேர் கல்வி சுற்றுலா
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 25,000 பேர் கல்வி சுற்றுலா
ADDED : ஜூலை 19, 2024 12:19 AM
சென்னை, சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும், 24,700 மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான திட்டத்தை, மேயர் பிரியா துவக்கினார்.
இதுகுறித்து மேயர் பிரியா கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளியில், 4, 5ம் வகுப்பு படிக்கும் 24,700 மாணவர்கள் கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், நுாற்றாண்டு நுாலகம், எழும்பூர் அருங்காட்சியகம், வண்டலுார் உயிரியல் பூங்கா, பெரம்பூர் ரயில் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக, 47.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். ஒரு பேருந்துக்கு, 55 மாணவர்கள் வீதம் 298 பேருந்துகள் இயக்கப்படும். முதற்கட்டமாக 275 மாணவர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இந்த கல்வி சுற்றுலா வாயிலாக மாணவர்களுக்கு கல்வி மற்றும் பொது அறிவு சிந்தனையுடன் மகிழ்ச்சியான கற்றல் சூழல் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.