/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மீண்டும் வெளியூர் பஸ்கள் இயக்கம் திருவொற்றியூர்வாசிகள் கோரிக்கை மீண்டும் வெளியூர் பஸ்கள் இயக்கம் திருவொற்றியூர்வாசிகள் கோரிக்கை
மீண்டும் வெளியூர் பஸ்கள் இயக்கம் திருவொற்றியூர்வாசிகள் கோரிக்கை
மீண்டும் வெளியூர் பஸ்கள் இயக்கம் திருவொற்றியூர்வாசிகள் கோரிக்கை
மீண்டும் வெளியூர் பஸ்கள் இயக்கம் திருவொற்றியூர்வாசிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 01:43 AM
திருவொற்றியூர்,:திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இருந்து, மதுரை, கன்னியாகுமரி, ஒசூர், திருப்பதி, பெங்களூரு, நெல்லை, கடலுார், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், புதுச்சேரி, வேளாங்கண்ணி போன்ற வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டதால், கோயம்பேடு வரை செல்ல வேண்டிய நிலையில் இருந்து, வடசென்னைவாசிகளுக்கு விமோசனம் கிடைத்தது.
பின், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, படிப்படியாக இந்த பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது, வேளாங்கண்ணி உள்ளிட்ட சில பேருந்து சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
தற்போது, கோயம்பேடும் இன்றி, கிளாம்பாக்கம் வரை செல்ல வேண்டியுள்ளது. அதற்கே பாதி நாள் போய் விடுவதாக சலித்துக் கொள்ளும் பயணியர், பல நுாறு ரூபாய் செலவழிகிறது என, வேதனை தெரிவிக்கின்றனர்.
முதியோர், குழந்தைகளுடன் வெளியூர் செல்வோர், பேருந்து சேவைகளை பெற முடியாத அளவில், பெரும் சிரமமாக உள்ளது.
எனவே, வடசென்னை மக்கள் பயன்பெறும் வகையில், திருவொற்றியூரில் இருந்து வெளியூருக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகளை, மீண்டும் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக, திருவொற்றியூர் நலச்சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.