/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பராமரிப்பு பணிக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு பராமரிப்பு பணிக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு
பராமரிப்பு பணிக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு
பராமரிப்பு பணிக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு
பராமரிப்பு பணிக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 08, 2024 01:41 AM
சோழிங்கநல்லுார்:இ.சி.ஆர்., -- ஓ.எம்.ஆர்., பகுதிகளை உள்ளடக்கிய, சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு, 51 பூங்காக்கள், 47 பொது கழிப்பறைகள் உள்ளன.
மேலும், விளையாட்டு மைதானம், மயான பூமி உள்ளது. அனைத்தையும், ஓராண்டு பராமரிக்க, ஒரு வார்டுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம், 90 லட்சம் ரூபாயை, மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. ஒவ்வொரு கட்டமைப்புகளும், வெவ்வேறு மாதத்தில் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.
இதனால், ஒப்பந்தம் முடிந்த மாதத்தில் இருந்து, இந்த தொகைக்கான ஒப்பந்தம் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.