/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெடித்த மின் இணைப்பு பெட்டி பகுதிவாசிகள் சாலை மறியல் வெடித்த மின் இணைப்பு பெட்டி பகுதிவாசிகள் சாலை மறியல்
வெடித்த மின் இணைப்பு பெட்டி பகுதிவாசிகள் சாலை மறியல்
வெடித்த மின் இணைப்பு பெட்டி பகுதிவாசிகள் சாலை மறியல்
வெடித்த மின் இணைப்பு பெட்டி பகுதிவாசிகள் சாலை மறியல்
ADDED : ஜூன் 04, 2024 12:47 AM
அயனாவரம், அயனாவரத்தில், சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி பெட்டி, உயர் மின் அழுத்தத்தால் திடீரென வெடித்தது.
அயனாவரம், பார்த்தசாரதி தெருவில் உள்ள மின் பகிர்மான இணைப்பு பெட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
அங்கிருந்தோர், சாலையில் இருந்த மணலை கொட்டியும், அருகில் உள்ள தனியார் பள்ளியில் இருந்த தீயணைப்பானை பயன்படுத்தியும் தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சோதித்த போது, உயர் மின்னழுத்தம் காரணமாக மின்மாற்றி பெட்டி வெடித்தது தெரிந்தது.
இதனால், இரவு முழுதும் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. பின், நேற்று மின்மாற்றியை சீரமைத்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
அயனாவரம், என்.எம்.கே., தெருவில், தொடர்ந்து பல மணிநேரம் மின்சாரம் தடைபட்டு உள்ளது. இதை மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், கடும் அவதியடைந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் நள்ளிரவு, அதே பகுதியில் உள்ள கொன்னுார் நெடுஞ்சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
பின், அப்பகுதியில் தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் சலசலசப்பை ஏற்படுத்தியது.