/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு
கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு
கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு
கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு
ADDED : ஜூன் 20, 2024 12:20 AM

எழும்பூர், கூவம் ஆற்றில் தவறி விழுந்த வடமாநில வாலிபர், மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டார்.
எழும்பூர், எத்திராஜ் கல்லுாரி அருகிலுள்ள கூவம் ஆற்றில், நேற்று காலை 7:00 மணியளவில், வடமாநில வாலிபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்தோர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகு வாயிலாக சென்று வாலிபரை மீட்க முயற்சித்தனர்; ஆனால் முடியவில்லை. கூவம் ஆற்றில் ஆகாய தாமரை மற்றும் குப்பை அதிக அளவில் இருந்ததால், சேற்றில் சிக்கிய வாலிபரை மீட்க முடியாமல் திணறினர்.
பின், மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பின், கயிறு கட்டி அவரை மீட்டனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவரிடம் விசாரித்தும், அவர் குறித்த விபரம் தெரியவில்லை.
உடல் முழுதும் காயங்கள் இருந்ததால், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.