/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விரிவாக்கம் செய்த இடத்தில் புது சாலை விரைவாக அமைக்க வேண்டுகோள் விரிவாக்கம் செய்த இடத்தில் புது சாலை விரைவாக அமைக்க வேண்டுகோள்
விரிவாக்கம் செய்த இடத்தில் புது சாலை விரைவாக அமைக்க வேண்டுகோள்
விரிவாக்கம் செய்த இடத்தில் புது சாலை விரைவாக அமைக்க வேண்டுகோள்
விரிவாக்கம் செய்த இடத்தில் புது சாலை விரைவாக அமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 29, 2024 02:24 AM

அமைந்தகரை:சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையை விரைவாக சீரமைத்து, புதிய சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னையில் பாரிமுனை, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு,பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான சாலையாக பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இச்சாலையில், பூந்தமல்லி பகுதியில் துவங்கி அரும்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் என பிராட்வே வரை, நாள் முழுதும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை நிலவி வருகிறது.
குறிப்பாக, கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லுாரியின் அருகில் உள்ள 'டேல்கேட்' பேருந்து நிறுத்தத்தில் இருந்து, அமைந்தகரை சந்தை வரை, சாலை சிறிய அளவில் குறுகிய சாலையாக உள்ளது. இதனால், காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து, நம் நாளிதழிலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது.
இதற்காக, குறுகிய சாலை அமைந்துள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை சொந்தமாக்கியதையடுத்து, சாலையை விரிவாக்கம்செய்யும் பணியை துவக்கியது.
முதல்கட்டமாக, கையகப்படுத்தப்பட்ட கட்டடத்தை இடித்து, சாலை விரிவுபடுத்தப்பட்டு, அங்கு புதிய தார்ச்சாலையை அமைக்காமல்அப்படியே விடப்பட்டுள்ளது.
விரிவாக்கப் பணி அரைகுறையாக இருப்பதால், வாகன ஓட்டிகள்விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.
எனவே, போக்குவரத்திற்கு இடையூறாகவும், சீரமைக்கப்படாமல் பள்ளமாகவும் உள்ள சாலையை விரைவாக சீரமைத்து, புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.