/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஜாபர்கான்பேட்டை கால்வாய் சேதம் சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் ஜாபர்கான்பேட்டை கால்வாய் சேதம் சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம்
ஜாபர்கான்பேட்டை கால்வாய் சேதம் சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம்
ஜாபர்கான்பேட்டை கால்வாய் சேதம் சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம்
ஜாபர்கான்பேட்டை கால்வாய் சேதம் சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜூலை 29, 2024 02:22 AM

ஜாபர்கான்பேட்டை,:இடிந்து விழுந்து ஐந்து ஆண்டுகளாகியும், ஜாபர்கான்பேட்டை கால்வாயின் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படாததால், மழைக்காலத்தில் அப்பகுதியில் வெள்ளம் சூழும் அபாயம் நிலவுகிறது.
கோடம்பாக்கம் மண்டலம், 139வது வார்டு, ஜாபர்கான்பேட்டை ஆர்.வி., நகர் எஸ்.சி.பி., முதல் முத்துரங்கம் பிளாக் வழியாக, 800 மீட்டர் துாரத்திற்கு ஜாபர்கான்பேட்டை கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாய், சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை பராமரிப்பில் உள்ளது. ஜாபர்கான்பேட்டை 139வது வார்டில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த கால்வாயில் விடப்படுகிறது.
இந்த கால்வாய் ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு குடிசைகளை, மாநகராட்சி அதிகாரிகள் சில ஆண்டுகளுக்கு முன் அகற்றினர். பின், கால்வாயின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், அப்பாதுரை தெரு அருகே உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், சாலை கால்வாயில் சரிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கால்வாயை சீர்செய்ய, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, போதிய நிதி இல்லாததால் கைவிடப்பட்டது.
தற்போது, அசோக் நகரில் உள்ள மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறும் மழைநீர், ஜாபர்கான்பேட்டை கால்வாயில் இணைக்கப்பட்டு, அடையாற்றில் கலக்கும் விதமாக அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், இந்த மழைக்காலத்தில், ஜாபர்கான்பேட்டை கால்வாயில் அதிக அளவில் மழைநீர் வரும் நிலை உள்ளது. தடுப்புச்சுவர் இல்லாததால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.
எனவே, கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.