/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜூலை 20, 2024 01:45 AM

சென்னை:மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் மட்டுமின்றி, கட்டுமான பொருட்களையும் மாநகராட்சியினர் அகற்றினர்.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கோடம்பாக்கத்தில், மாம்பலம் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையை ஆக்கிரமித்து காய்கறி, பூ, பழக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் கட்டுமானப் பொருட்களும், சாலையில் ஆங்காங்கே ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனால், தினசரி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள், தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தனர்.
புகாரின்படி நேற்று, நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் மட்டுமின்றி, ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களையும், மாநகராட்சியினர் அகற்றினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி வித்யா கூறுகையில்,''இரண்டு நாட்களுக்கு முன், தி.மு.க., - அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இரண்டு ஆக்கிரமிப்பாளர்களும், மண்டல அலுவலகத்திற்கு வந்து பிரச்னை செய்தனர்.
ஆனாலும், மண்டல அதிகாரி பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்,'' என்றார்.