/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரெட்டேரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் ரெட்டேரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ரெட்டேரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ரெட்டேரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ரெட்டேரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ADDED : ஜூலை 25, 2024 12:48 AM

புழல், மாதவரம் மண்டலத்தில், நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில், 700 ஏக்கரில் ரெட்டேரி உள்ளது. இந்த ஏரி, முழுமையாக நிரம்பினால், 0.22 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.
ஆனால், நீர்வள ஆதாரத்துறையின் அலட்சியத்தால், ஏரியின் பராமரிப்பும், நீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி விட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி ரெட்டேரியை சுற்றுலா தலமாக மாற்ற அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு, அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அந்த வகையில், புழல் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் சர்வே எண் 1420/1 மற்றும் 647ல் உள்ள ஏரிப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 72 வீடுகளை, நீதிமன்ற உத்தரவின்படி அகற்றும் பணி நேற்று துவங்கியது.
இதில், புழல், எம்.ஜி.ஆர்., நகர் 3 மற்றும் 4வது தெரு, நேரு நகர், காஞ்சி நகர் விரிவு, சுப்பிரமணி நகர், பரிமளம் நகர், செகரட்டரியேட் காலனி 16வது தெரு ஆகிய பகுதிகளில், போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறையின் வாயிலாக 45 ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.
மீதமுள்ள வீடுகள் இடிக்கும் பணி இன்று தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது, பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வீடுகளை இழந்தோர் கூறியதாவது: போதிய கால அவகாசம் தராமல் வீடுகளை இடித்துள்ளனர். அதிலும், குறிப்பிட்ட வீடுகளை மட்டுமே இடித்துள்ளனர். ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படும் அனைத்து வீடுகளையும் இடிக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.