ADDED : ஜூலை 25, 2024 12:49 AM

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில், கடந்த ஒரு வாரத்தில், 12 மாடுகளை சுகாதார துறையினர் பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பறிமுதல் செய்யப்படும் மாடுகளின் காதில் 'டோக்கன்' அணிவிக்கப்படும். ஒரு மாடு முதல் முறை பிடிபட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை பிடிபட்டால், 10,000 ரூபாய்; மூன்றாவது முறை பிடிபட்டால் புளூ கிராசிடம் ஒப்படைக்கப்படும்.
விபத்து, உயிர் பலி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்' என்றார்.