/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்மாற்றியை சூழ்ந்த முட்புதர் அகற்றம் மின்மாற்றியை சூழ்ந்த முட்புதர் அகற்றம்
மின்மாற்றியை சூழ்ந்த முட்புதர் அகற்றம்
மின்மாற்றியை சூழ்ந்த முட்புதர் அகற்றம்
மின்மாற்றியை சூழ்ந்த முட்புதர் அகற்றம்
ADDED : ஜூலை 29, 2024 02:28 AM

எண்ணுார்:எர்ணாவூர், முல்லை நகர் சந்திப்பில், மூன்று மின்மாற்றிகள், இரு மின்பெட்டிகள் உள்ளன. மின் வாரியத்தின் அலட்சியத்தால், மின்மாற்றி புதருக்கும் புதையும் நிலைமை உருவானது.
இதனால், அவசர காலத்தில் ஊழியர்கள் நெருங்க முடியாத அளவிற்கு அபாயகரமாக மாறியது. மேலும், விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறியது.
இது குறித்து வாசகர் ஒருவர், நம் நாளிதழ் புகார் பெட்டி பகுதியில் சுட்டிக்காட்டினார். இதையடுத்து விசாரித்து செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகளின் உத்தரவின்படி, மின் மாற்றியை சுற்றி இருந்த கருவேல முட்செடிகள் மற்றும் கொடிகளை, மின் ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.