/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்' 'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்'
'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்'
'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்'
'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்'
ADDED : ஜூலை 29, 2024 02:30 AM

பெரம்பூர்:பெரம்பூர், பாரதி சாலையில், ஸ்ரீ கீத கோவிந்த மண்டலி இயங்கி வருகிறது. இதன் 49ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பூர் அய்யப்பன் கோவிலில், ராதா கல்யாண வைபவம்,வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி நடந்தது. தொடர்ந்து ராதா கல்யாண வைபத்தை வெங்கடரமணன், கல்யாணராமன், ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் பாகவதர் குழுவினர் வெகு விமரிசையாக நிகழ்த்தினர்.
மதியம் 12:30 மணிக்கு திருமாங்கல்யதாரணமும் மஹா தீபாராதனையும் நடந்தது.
ஸ்ரீ கீத கோவிந்த மண்டலியைச் சேர்ந்த ராதா, உஷா ராமதாஸ், விமலா மற்றும் சியாமளா உள்ளிட்டோர் கூறியதாவது:
ஆத்மார்த்தமான பக்தியால், இறைவனை அடைய முடியும் என்பதே, ராதா கல்யாண வைபவத்தின் தாத்பர்யம்.
ஆண்டுதோறும், ராதா கல்யாணம், அம்பாள் கல்யாணம், சிவபஜனை, நவராத்திரி உள்ளிட்ட பல விழாக்களை நடத்தி வருகிறோம். இதில் 1,000 பேருக்கு அன்னதானமும் வழங்குகிறோம்.
பெரம்பூர் சங்கரமடத்தில், வார நாட்களில் தினமும் இரண்டு மணி நேரம், பஜனை பாடல்களுக்கான வகுப்புகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.