ADDED : ஜூலை 24, 2024 12:23 AM

சென்னை, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா சாலையில் உள்ள மழைநீர் வடிகாலை நெடுஞ்சாலைத் துறையினர் துார்வாரி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத் துறையினரும் வடிகால் துார்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில், மழைநீர் வடிகால் துார்வாரும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறுகையில், 'தீவுத்திடல் முதல் சைதாப்பேட்டை வரை, அண்ணா சாலையில் வடிகால் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.