/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீடு இடிக்கும் பணி கேட்டு மிரட்டியவருக்கு 'காப்பு' வீடு இடிக்கும் பணி கேட்டு மிரட்டியவருக்கு 'காப்பு'
வீடு இடிக்கும் பணி கேட்டு மிரட்டியவருக்கு 'காப்பு'
வீடு இடிக்கும் பணி கேட்டு மிரட்டியவருக்கு 'காப்பு'
வீடு இடிக்கும் பணி கேட்டு மிரட்டியவருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 21, 2024 01:16 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், உதயசூரியன் தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல் ஜான்சன், 45; தனியார் நிறுவன ஊழியர். இவர், தன் பழைய வீட்டை இடித்து, புது வீடு கட்ட திட்டமிட்டுள்ளார்.
வீட்டை இடிப்பதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த கட்டட இன்ஜினியர் ஒருவருக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட, புதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ., கோவில் தெருவைச் சேர்ந்த யுவராஜ், 41, என்பவர், நேற்று, மைக்கேல் ஜான்சனிடம் வந்து, வீடு இடிக்கும் ஒப்பந்த பணியை தனக்கு தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து, விசாரித்த, திருவொற்றியூர் போலீசார் யுவராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.