/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாலிபர் தாக்கியதில் குடிபோதை ஆசாமி பலி வாலிபர் தாக்கியதில் குடிபோதை ஆசாமி பலி
வாலிபர் தாக்கியதில் குடிபோதை ஆசாமி பலி
வாலிபர் தாக்கியதில் குடிபோதை ஆசாமி பலி
வாலிபர் தாக்கியதில் குடிபோதை ஆசாமி பலி
ADDED : ஜூலை 21, 2024 01:16 AM
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, ராஜிவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 44; கொத்தனார். அதே பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 25; கூரியர் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
நேற்று இரவு சக்திவேல் குடிபோதையில், செந்தில்குமாரிடம் அநாகரிக வார்த்தைகளை பேசி வீண் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், தன் கையால் சக்திவேல் வயிற்றில் ஓங்கி குத்தியுள்ளார். இதில், சரிந்து கீழே விழுந்த செந்தில்குமாருக்கு மூக்கில் அடிபட்டுள்ளது. ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. பள்ளிக்கரணை போலீசார், செந்தில்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.