/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது
பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது
பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது
பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது
ADDED : ஜூலை 19, 2024 12:29 AM
தரமணி, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 36; கொத்தனார். நேற்று முன்தினம் இரவு தரமணி ரயில்வே சாலை அருகே நடந்து சென்றார்.
அப்போது, போதையில் இருந்த மூன்று பேர், சுந்தர்ராஜை தாக்கி பணம் பறித்தனர். தரமணி போலீசார் விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஜெயகுமார், 36, தரமணி பாலு, 24, விஜய், 24, என தெரிந்தது.
நேற்று, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.