/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பல்லாவரம் - குன்றத்துார் சாலை நாசம் நாள்தோறும் தடுமாறும் வாகன ஓட்டிகள் பல்லாவரம் - குன்றத்துார் சாலை நாசம் நாள்தோறும் தடுமாறும் வாகன ஓட்டிகள்
பல்லாவரம் - குன்றத்துார் சாலை நாசம் நாள்தோறும் தடுமாறும் வாகன ஓட்டிகள்
பல்லாவரம் - குன்றத்துார் சாலை நாசம் நாள்தோறும் தடுமாறும் வாகன ஓட்டிகள்
பல்லாவரம் - குன்றத்துார் சாலை நாசம் நாள்தோறும் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 03, 2024 12:26 AM

பல்லாவரம், பல்லாவரம் - குன்றத்துார் சாலை, பாதாள சாக்கடை திட்ட பணியால் குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சி, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. குழாய் பதிக்கப்படும் இடங்களில், பள்ளத்தை, சரியாக மூடாததால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிடுகின்றன.
லேசான மழை பெய்தாலே, புதைகுழிகளாக மாறி, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் பள்ளத்தை முறையாக மூடாததால், தொடர்ச்சியாக மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
அதிக போக்குவரத்து கொண்ட இச்சாலையில் மரண பள்ளங்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். இதன் காரணமாக, 'பீக் ஹவர்' நேரத்தில் மூச்சு முட்டும் அளவிற்கு நெரிசலும் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகளின் நிலைமையை நேரில் பார்த்தும், பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வராதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு, சாலையை முறையாக சீரமைக்க முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.