/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொங்கி பாயும் கழிவுநீர் புல்லாபுரத்தில் சுகாதார கேடு பொங்கி பாயும் கழிவுநீர் புல்லாபுரத்தில் சுகாதார கேடு
பொங்கி பாயும் கழிவுநீர் புல்லாபுரத்தில் சுகாதார கேடு
பொங்கி பாயும் கழிவுநீர் புல்லாபுரத்தில் சுகாதார கேடு
பொங்கி பாயும் கழிவுநீர் புல்லாபுரத்தில் சுகாதார கேடு
ADDED : ஜூன் 07, 2024 12:35 AM

கீழ்ப்பாக்கம், புல்லாபுரத்தில், பாதாள சாக்கடையில் இருந்து பொங்கி வரும் கழிவுநீரால், குடியிருப்பில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், கீழ்ப்பாக்கம், புல்லாபுரத்தில் ஒன்று முதல் எட்டு தெருக்கள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதியில், மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தினர் முறையாக பராமரிப்பது கிடையாது.
இதனால், ஏழாவது தெருவில் கடந்த 10 நாட்களாக, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் நோய் தொற்று அபாயம் நீடிக்கிறது.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது:
புல்லாபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கிறோம். கடந்த 10 நாட்களாக, ஏழாவது தெருவில் சாக்கடை நிரம்பி, தெருவில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.