Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்து வசதியின்றி பயணியர் தவிப்பு

புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்து வசதியின்றி பயணியர் தவிப்பு

புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்து வசதியின்றி பயணியர் தவிப்பு

புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்து வசதியின்றி பயணியர் தவிப்பு

ADDED : ஜூன் 07, 2024 12:34 AM


Google News
சென்னை, சென்னை புறநகர் மின்சார ரயில்களை இணைக்கும் வகையில், போதிய அளவில் சிற்றுந்து வசதி இல்லாததால், பயணியர் அவதிபடுகின்றனர்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில், தினமும் இயக்கப்படும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி தடத்தில் பெரும்பாலான பேருந்து நிலையங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருக்கிறது.

இதனால், மக்கள் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகள் அல்லது சிற்றுந்துகள் இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:

புறநகர் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், போதிய அளவில் பேருந்து வசதி இல்லை. குறிப்பாக அம்பத்துார், கொரட்டூர், வில்லிவாக்கம், திருநின்றவூர், திருவொற்றியூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருக்கிறது.

போதிய சிற்றுந்து வசதியும் இல்லை. இதனால், காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது.

எனவே, மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், பேருந்து நிலையங்களில் இருந்து சிற்றுந்து சேவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us