Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.33.73 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.33.73 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.33.73 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.33.73 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

ADDED : ஜூன் 18, 2024 12:07 AM


Google News
சென்னை, ராயபுரத்தில் செயல்பட்டு வரும் 'ராயல் டிரான்ஸ்போர்ட்' என்ற நிறுவனத்தில், 'ஆபீஸ் கிளார்க்' ஆக பணிபுரிந்தவர் பாரதி, 29. இவர், 2019 ஆக., 22ல் பணி முடித்து தன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

காசிமேடு, ஜீவரத்தினம் சாலை அருகே, அதே வழித்தடத்தில் வந்த லாரி, பாரதியின் பைக் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்து, தலை உட்பட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பாரதி இறந்தார்.

இதையடுத்து, கணவரின் இறப்புக்கு 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், பாரதி மனைவி மணிமொழி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி லிங்கேஸ்வரன் முன் நடந்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''அதிவேகம், அஜாக்கிரதையாக லாரியை இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம்.

எனவே, மனுதாரர்களுக்கு 33.73 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us