/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விடுமுறையில் இயங்கிய பள்ளிக்கு எதிர்ப்பு விடுமுறையில் இயங்கிய பள்ளிக்கு எதிர்ப்பு
விடுமுறையில் இயங்கிய பள்ளிக்கு எதிர்ப்பு
விடுமுறையில் இயங்கிய பள்ளிக்கு எதிர்ப்பு
விடுமுறையில் இயங்கிய பள்ளிக்கு எதிர்ப்பு
ADDED : ஜூன் 18, 2024 12:07 AM
கே.கே.நகர், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பொது விடுமுறை தினம். ஆனால், கே.கே.நகர் அழகிரிசாமி சாலையில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் மேல்நிலைப்பள்ளி, நேற்று வழக்கம் போல் இயங்கியது.
இதற்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த கே.கே.நகர் போலீசார், பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.