/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராணுவ அலுவலர் குடியிருப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு ராணுவ அலுவலர் குடியிருப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு
ராணுவ அலுவலர் குடியிருப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு
ராணுவ அலுவலர் குடியிருப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு
ராணுவ அலுவலர் குடியிருப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு
ADDED : ஜூலை 31, 2024 01:06 AM

சென்னை, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள கணக்குகள் துறை ராணுவ அலுவலர் குடியிருப்பில், 1.62 கோடி ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை தலைமை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தேவிகா ரகுவன்சி, மற்றும் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்:
சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் பேசியதாவது:
முப்படைகளில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், பணியின் போதோ, ஒய்வு பெற்ற நிலையில் இறந்தால், அவர்களது குடும்பத்துக்கு சேர வேண்டிய ஒய்வூதியம் விரைந்து 48 மணி நேரத்துக்குள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான எந்த சந்தேகங்கள் இருந்தாலும், தேனாம்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு வந்து தெரியப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தேவிகா ரகுவன்சி கூறுகையில், ''ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தை செயல்படுத்தும் 'ஸ்பர்ஷ்' போர்ட்டலில் காகிதமில்லா ஆன்லைன் திட்டமாக செயல்படுத்தப்படும். நடப்பாண்டிற்கான பிரதமரின் டிஜிட்டல் இந்தியா விருது 'ஸ்பர்ஷ்' திட்டத்துக்கு கிடைக்க வேண்டும்,'' என்றார்.
விழாவில், முன்னாள் தலைமைப் பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் கோபாலன், பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் நிதி ஆலோசகர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.