/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேடவாக்கம் கூட்ரோடு ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள் மேடவாக்கம் கூட்ரோடு ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள்
மேடவாக்கம் கூட்ரோடு ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள்
மேடவாக்கம் கூட்ரோடு ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள்
மேடவாக்கம் கூட்ரோடு ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள்
ADDED : ஜூலை 31, 2024 01:06 AM

மேடவாக்கம், மேடவாக்கம், கூட்ரோடு அருகே உள்ள ஏரி, ஆக்கிரமிப்புகள் நிறைந்து, குப்பை சூழ்ந்து, அழிவின் விளிம்பில் உள்ளது. ஏரியை துார் வாரி, பசுமை பூங்கா அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க செயலர் தினகரன், 42, கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 528 ஏரிகள் உள்ளன. இதில், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி, மேடவாக்கம் ஊராட்சியில் உள்ள நான்கு ஏரிகளும், எவ்வித பராமரிப்புமின்றி, நலிவடைந்த நிலையில் உள்ளன.
முக்கியமாக, மேடவாக்கம் கூட்ரோடு ஏரி, அழிவின் விளிம்பில் உள்ளது.
தாங்கல் வகையைச் சேர்ந்த இந்த ஏரியின், 40 சதவீத பரப்பு, ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
தற்போதும் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
இப்போது 2 கி.மீ., பரப்பில் உள்ள இந்த ஏரி, இப்பகுதியின் நீர்ப்பிடிப்பு ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏரியைச் சுற்றி, தற்போதும் குப்பைக்கழிவுகள் தாராளமாக கொட்டப்படுகின்றன.
ஆகாயத்தாமரைகள் நிறைந்துள்ள ஏரியில் சாக்கடை கலப்பதால், தேங்கியுள்ள நீர் முழுதும் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. பொதுப்பணித் துறையும், மேடவாக்கம் ஊராட்சி நிர்வாகமும் இந்த ஏரி குறித்து எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை.
சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள், ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.