/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஒயரால் கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை? ஒயரால் கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை?
ஒயரால் கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை?
ஒயரால் கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை?
ஒயரால் கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை?
ADDED : ஜூலை 19, 2024 12:28 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி, வியாசர் நகரை சேர்ந்தவர் நாகராஜன், 82. ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. அவர் மனைவி, சரோஜினி பாய், 78. ஓய்வு பெற்ற ஆசிரியை.
இவர்களுக்கு கற்பகம், 51, கலைவாணி, 42, ஆகிய இருமகள்கள் உள்ளனர். இருவரும், திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சரோஜினி பாய், வீட்டின் வரவேற்பறையில் கீழே மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த நாகராஜன், இரண்டாவது மகள் கலைவாணிக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்து பார்த்த போது, மூதாட்டி இறந்தது தெரியவந்தது. மூதாட்டியின் கழுத்தில் மொபைல் போன் சார்ஜர் ஒயர் சுற்றியிருந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மோப்ப நாய் ஷீபா மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விசாரணை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.