Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேர்வில் ஆள்மாறாட்டம் வடமாநில இளைஞர் சிக்கினார்

தேர்வில் ஆள்மாறாட்டம் வடமாநில இளைஞர் சிக்கினார்

தேர்வில் ஆள்மாறாட்டம் வடமாநில இளைஞர் சிக்கினார்

தேர்வில் ஆள்மாறாட்டம் வடமாநில இளைஞர் சிக்கினார்

ADDED : ஜூலை 20, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
ஆவடி:சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மையம், ஆவடியில் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் துாய்மை பணியாளர், சமையலர், ஓட்டுனர், மெக்கானிக், தோட்ட வேலை செய்பவர் உள்ளிட்ட 'டி' பிரிவுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்றது.

இதற்காக 2023ல் எழுத்து தேர்வு நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கடந்த 10ம் தேதி முதல் உடற்தகுதித் தேர்வு தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோர் பங்கேற்றுள்ளனர். இத்தேர்வு 23ம் தேதி வரை நடக்க உள்ளது.

கடந்த 18ம் தேதி நடந்த உடற்தகுதித் தேர்வின் போது, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரும், தற்போது திருவொற்றியூரில் வசிப்பவருமான கரண்சிங் ராத்தோர், 21 என்பவரை பரிசோதித்தனர். அடையாள அட்டையில் உள்ள படமும், எழுத்துத் தேர்வில் நடந்த போது எடுத்த படமும் ஒத்துப் போகவில்லை. கைரேகையை பரிசோதித்த போது, அதுவும் ஒத்து போகவில்லை.

இதையடுத்து கரண்சிங் ராத்தோர் மீது சந்தேகமடைந்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரிடம், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் புகார் அளித்தனர்.

அதன்படி, அந்த நபரை கைது செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது. இதேபோல் வேறு யாராவது ஆள்மாறாட்டம் செய்துள்ளனரா என்றும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us