ADDED : ஜூலை 20, 2024 01:42 AM

சிட்லப்பாக்கம்:தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத, மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் சிட்லப்பாக்கத்தில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலத்தில், 25 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட சிட்லப்பாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
சிட்லப்பாக்கம் மற்றும்மாடம்பாக்கம் மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய, கொண்டு வரப்பட்ட சிட்லபாக்கம் - மாடம்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
சிட்லபாக்கம் பகுதியில் உள்ள சாலைகள், கால்வாய்கள் படுமோசமான நிலையில் உள்ளன. குப்பை சேகரிப்பு, பூங்காக்கள் சீரமைப்பு பணி படுமோசம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.