Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராமநாதபுரம் பள்ளிக்கு புதிய கட்டடம் மாணவர்கள் தற்காலிகமாக இடமாற்றம்

ராமநாதபுரம் பள்ளிக்கு புதிய கட்டடம் மாணவர்கள் தற்காலிகமாக இடமாற்றம்

ராமநாதபுரம் பள்ளிக்கு புதிய கட்டடம் மாணவர்கள் தற்காலிகமாக இடமாற்றம்

ராமநாதபுரம் பள்ளிக்கு புதிய கட்டடம் மாணவர்கள் தற்காலிகமாக இடமாற்றம்

ADDED : ஜூலை 08, 2024 05:24 PM


Google News
திருவொற்றியூர்:மாநகராட்சி ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளிக்கு, 1.73 கோடி ரூபாய் செலவில் எட்டு வகுப்பறைகள் கட்டும் பணி துவங்கியுள்ளது. மாணவர்கள் தற்காலிக வகுப்பறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சி, ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளியில், 500 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி, 1981 ம் ஆண்டில் கட்டப்பட்ட, பழமையான பலவீனமான கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இது குறித்து, நான்காவது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் எழுப்பிய தொடர் கேள்விகளால், மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின், 1.73 கோடி ரூபாய் செலவில், எட்டு வகுப்பறைகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கட்டடப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, பள்ளியின் நகர்புற நலவாழ்வு மைய வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வகுப்பறைகளுக்கு, நேற்று மாணவர்கள் மாற்றப்பட்டனர்.

ஓரிரு வாரங்களில், பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும் என, பள்ளி தலைமை ஆசிரியை முத்து செல்வி, மாநகராட்சி உதவி பொறியாளர் சஞ்சீவிராவ் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us