/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நெற்குன்றம் பள்ளிக்கு ரூ.63 லட்சத்தில் புது கட்டடம் நெற்குன்றம் பள்ளிக்கு ரூ.63 லட்சத்தில் புது கட்டடம்
நெற்குன்றம் பள்ளிக்கு ரூ.63 லட்சத்தில் புது கட்டடம்
நெற்குன்றம் பள்ளிக்கு ரூ.63 லட்சத்தில் புது கட்டடம்
நெற்குன்றம் பள்ளிக்கு ரூ.63 லட்சத்தில் புது கட்டடம்
ADDED : ஜூலை 30, 2024 12:28 AM
நெற்குன்றம், ஜூலை 30-
வளசரவாக்கம் மண்டலம், 148வது வார்டு, நெற்குன்றம் மேட்டுக்குப்பம் சாலையில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு போதிய வகுப்பறை இல்லாததால், மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, பள்ளி கட்டடத்தின் முதல் தளத்தின் மேல், இரண்டாம் தளம் கட்டி, 4 வகுப்பறைகள் கட்ட, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, 63.57 லட்சம் ரூபாய் செலவில், நான்கு கட்டடங்கள் கட்டும் பணியை, மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி நேற்று துவக்கி வைத்தார்.