ADDED : ஜூலை 20, 2024 01:05 AM
காசிமேடு:கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 53. இவர், ஒரு வாரத்திற்கு முன், காசிமேடு, எஸ்.என்.செட்டி தெருவிற்கு வந்து, வாடகை வீட்டில் தங்கி, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், படகுகள் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, கடலோரம் தன் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, மூன்று பேர், சண்முகத்தின் மொபைல் போனை பறித்து தப்பியோடினர்.
இது குறித்து, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.