மருந்தகத்தில் கைவரிசை வாலிபர் கைது
மருந்தகத்தில் கைவரிசை வாலிபர் கைது
மருந்தகத்தில் கைவரிசை வாலிபர் கைது
ADDED : ஜூலை 20, 2024 01:05 AM
தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை, வரதராஜ பெருமாள் கோவிலில் 24 மணி நேரம் செயல்படும், தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, இரு தினங்களுக்கு முன், அதிகாலை மருத்துவமனையில் புகுந்த மர்ம நபர், மருந்தகத்தின் கல்லா பெட்டியில் இருந்த, 10,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்லக்குட்டி, 26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 5,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது, ஆறு திருட்டு வழக்குகள் உள்ளன.