கள்ளசந்தையில் மதுவிற்றவர்கள் கைது
கள்ளசந்தையில் மதுவிற்றவர்கள் கைது
கள்ளசந்தையில் மதுவிற்றவர்கள் கைது
ADDED : ஜூன் 06, 2024 12:27 AM

சென்னை, லோக்சபா தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
புளியந்தோப்பு, போலுநாயக்கன் தெருவில் கள்ளச்சந்தையில் மது விற்ற மணி,52 என்பவரை கைது செய்து, 20 குவார்ட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே பகுதியில், அப்பு, 26 என்பவரிடம் 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஓட்டேரி டோபிகானா குடிசைப்பகுதியில் காட்டு ரோஜா,65 என்பவரிடம் 20 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வியாசர்பாடியில் விமலா, 40 என்பவரை கைது செய்தனர்.
தரமணி, எம்.ஜி.ஆர்., சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், கள்ளச்சந்தையில் மது விற்ற செந்தில்குமார், 39, சந்திரன், 55, வெங்கடேஷ், 29, ஆகியோரை அடையாறு மதுவிலக்கு போலீசார் கைது செய்து, பாரில் இருந்து, 1,190 மது பாட்டில்கள் மற்றும் 25,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நங்கநல்லுார், எம்.ஜி.ஆர்.,சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகே இளையராஜா, 32, டென்னிஸ், 42 ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 131 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.