/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாற்றுத்திறனாளிகளுக்கு 'லயன்ஸ் கிளப்' உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகளுக்கு 'லயன்ஸ் கிளப்' உதவிக்கரம்
மாற்றுத்திறனாளிகளுக்கு 'லயன்ஸ் கிளப்' உதவிக்கரம்
மாற்றுத்திறனாளிகளுக்கு 'லயன்ஸ் கிளப்' உதவிக்கரம்
மாற்றுத்திறனாளிகளுக்கு 'லயன்ஸ் கிளப்' உதவிக்கரம்
ADDED : ஜூன் 22, 2024 12:20 AM

சென்னை, பன்னாட்டு அரிசா சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள, அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று மாலை நடந்தது.
விழாவில், ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜோதிமணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின், அவர் பேசுகையில், ''மாற்றுத்திறனாளிகள், பல்வேறு திறன் உள்ளவர்களாக இருப்பர்.
உலக சாதனைகளை படைக்கும் வகையில், அவர்களின் திறன் உள்ளது. தமிழக அரசு, மாற்றுத்திறானாளிளுக்கான ஓதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும்,'' என்றனர்.
தொடர்ந்து, சங்கத்தின் மாற்றுத்தினாளர் நலன் மாவட்ட தலைவர் கோபிநாத், மேற்கு மாம்பலம் வியாபாரிகள் சங்கச் செயலர் நெல்லை சிவராஜ், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் வரதகுட்டி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில், சென்னை சாய் துணை மேட்ரிமோனி நிறுவனர் பஞ்சாபகேசன், அரிமா சங்க நிர்வாகிகளான விஜய் ஆனந்த், சிவகுமார், உதயகுமார், ராகவேந்திரா மணி, மணிலால் மற்றும் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் இருந்தனர்.