ADDED : ஜூன் 22, 2024 12:19 AM

சென்னை, ஜூன் 22-
தமிழ்நாடு பாரத சாரண மற்றும் சாரணி இயக்கத்தின், சென்னை சிட்டி சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள 'பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம்' பள்ளியில் சர்வதேச யோகா தினம், நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் 30 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையின் துணை பேராசிரியர் லக்ஷ்மணன், மாணவர்களுக்கு உடற்பயிற்சியின் நோக்கம் மற்றும் யோகாசனத்தின் முக்கியதுவம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிழ்வில், இயக்கத்தின் மாநில துணை செயலர் முத்தமிழ் பாண்டியன், பவன்ஸ் பள்ளியின் முதல்வர் சுப்ரமணியன், கே.ஆர்.எம்., பள்ளியின் முதல்வர் சிவசக்தி, மாவட்ட செயலர் சீனிவாசன், பவன்ஸ் பள்ளியின் தமிழ் துறை தலைவர் அனந்தராமன் உள்ளிட்டேர் இருந்தனர்.
உத்திரமேரூர்: சென்னை ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதா மற்றும் செங்கல்பட்டு போதி தர்மர் ஆயுர்வேதா கிளினிக் சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, உத்திரமேரூர், சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, 'ஞானவர்ஷினி' தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதா மருத்துவர் மீராசுதீர், பயிற்சிகள் அளித்தார்.
இதில், போதிதர்மர் ஆயுர்வேதா கிளினிக் மருத்துவர் தாமரை மணவாளன், சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா சக்திவேல், பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.