/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியுடன் எல்.ஐ.சி., ஒப்பந்தம் ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியுடன் எல்.ஐ.சி., ஒப்பந்தம்
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியுடன் எல்.ஐ.சி., ஒப்பந்தம்
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியுடன் எல்.ஐ.சி., ஒப்பந்தம்
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியுடன் எல்.ஐ.சி., ஒப்பந்தம்
ADDED : ஜூலை 19, 2024 12:22 AM
சென்னை, வங்கிகள் வாயிலாக காப்பீடு வசதிகளை வழங்கும் திட்டத்தில், ஐ.டி.எப்.சி., மற்றும் பர்ஸ்ட் வங்கியுடன், எல்.ஐ.சி., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும், 2047ம் ஆண்டிற்குள் ஆயுள் காப்பீடு பாதுகாப்பை வழங்குவதற்கும், அதில் வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் காப்பீட்டின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் எல்.ஐ.சி., நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஐ.டி.எப்.சி., மற்றும் பர்ஸ்ட் வங்கிகளுடன் இணைந்து காப்பீடு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிகழ்வில் எல்.ஐ.சி., மேலாண்மை இயக்குனர் ஆர்.துரைசாமி பங்கேற்றார்.
இதன் வாயிலாக, இந்த இரு வங்கிகளின் ஒரு கோடி வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி வாயிலாக எல்.ஐ.சி., பாலிசிகளை பெற முடியும்.