/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'லீக் கம் நாக் - அவுட்' டி - 20 சென்னை மாஸ் ரைடர்ஸ் வெற்றி 'லீக் கம் நாக் - அவுட்' டி - 20 சென்னை மாஸ் ரைடர்ஸ் வெற்றி
'லீக் கம் நாக் - அவுட்' டி - 20 சென்னை மாஸ் ரைடர்ஸ் வெற்றி
'லீக் கம் நாக் - அவுட்' டி - 20 சென்னை மாஸ் ரைடர்ஸ் வெற்றி
'லீக் கம் நாக் - அவுட்' டி - 20 சென்னை மாஸ் ரைடர்ஸ் வெற்றி
ADDED : ஜூலை 03, 2024 12:09 AM
சென்னை, சென்னையில், தி ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்ரீ குரு ராகவேந்திரா,'லீக் கம் நாக் - அவுட்' போட்டிகள் நடக்கின்றன.
மொத்தம், 'ஏ, பி, சி.,' என, 11 மண்டல பிரிவுகளில், தலா ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன.
மண்டலத்தில் தலா ஒவ்வொரு அணியும், எட்டு போட்டிகள் வீதம் 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் மோதி வருகின்றன. நேற்று முன்தினம் சேத்துப்பட்டு எம்.சி.சி., மைதானத்தில் நடந்த, 'எப்' மண்டலத்திற்கான இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது. சென்னை மாஸ் ரைடர்ஸ் மற்றும் டி.எஸ்.எஸ்., லெவன் அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற டி.எஸ்.எஸ்., லெவன் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை மாஸ் ரைடர்ஸ் அணி, 19 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 140 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய டி.எஸ்.எஸ்., லெவன் அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழப்பிற்கு, 133 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதனால், ஏழு ரன்கள் வித்தியாசத்தில், சென்னை மாஸ் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்ற மண்டலத்திற்கான அரையிறுதிப் போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.