/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீட்டில் நகை, பணம் சிக்காததால் ஏ.டி.எம்., கார்டில் ரூ.70,000 ஆட்டை வீட்டில் நகை, பணம் சிக்காததால் ஏ.டி.எம்., கார்டில் ரூ.70,000 ஆட்டை
வீட்டில் நகை, பணம் சிக்காததால் ஏ.டி.எம்., கார்டில் ரூ.70,000 ஆட்டை
வீட்டில் நகை, பணம் சிக்காததால் ஏ.டி.எம்., கார்டில் ரூ.70,000 ஆட்டை
வீட்டில் நகை, பணம் சிக்காததால் ஏ.டி.எம்., கார்டில் ரூ.70,000 ஆட்டை
ADDED : ஜூலை 03, 2024 12:09 AM
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, நாகப்பா நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 82; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த ஜூன், 27ம் தேதி, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து, அங்குள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம், வங்கி கணக்கில் இருந்து, 70,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக, சுப்பிரமணியனின் மொபைல் போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்துள்ளது.
உடனே வீட்டிற்குச் சென்று பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
திருடுவதற்காக வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் நகை, பணம் இல்லாததால், பீரோவில் இருந்த இரு ஏ.டி.எம்., அட்டைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஏ.டி.எம்., அட்டையின் பின்பக்கம் கடவுச் சொல்லை எழுதி வைத்திருந்ததால், அதை பயன்படுத்தி 70,000 ரூபாயை திருடியது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்படி, குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.