/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு செலவு நிதி நெருக்கடியால் தமிழக அரசு திணறல் கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு செலவு நிதி நெருக்கடியால் தமிழக அரசு திணறல்
கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு செலவு நிதி நெருக்கடியால் தமிழக அரசு திணறல்
கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு செலவு நிதி நெருக்கடியால் தமிழக அரசு திணறல்
கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு செலவு நிதி நெருக்கடியால் தமிழக அரசு திணறல்
ADDED : ஜூலை 27, 2024 01:35 AM
சென்னை, சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்படும் கால்வாயின் பராமரிப்பு செலவு நிலுவைத்தொகை தொடர்பான பேச்சு மீண்டும் துவங்கியுள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். இதற்காக, கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிக்கான செலவை, ஆந்திர அரசுடன், தமிழக அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதன்படி, 1996ம்ஆண்டு முதல் கால்வாய் பராமரிப்பு பணிக்கு, தமிழக அரசு 1,261 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 1,132 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மீதம் 129 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது.
இந்த நிலுவைத்தொகையை ஆந்திர அரசு கேட்டு வருகிறது. 'நிதியை விடுவித்தால் மட்டுமே, நீர் திறக்க முடியும்' என ஆந்திர அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
தற்போது, கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இல்லை. இதனால், பாசனத்திற்கு நீர் திறக்கவில்லை. மஹாராஷ்டிராவில் பெய்துவரும் மழையால், அணைக்கு விரைவில் நீர்வரத்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அதற்குள் நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஆந்திர அதிகாரிகள் வலியுறுத்தினர்.
எனவே, இதுதொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியுள்ளது. தமிழக அரசின் நிதி நெருக்கடியால், நிலுவைத்தொகையை பல கட்டங்களாக விடுவிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
***