/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குதிரை உதைத்ததில் பராமரிப்பாளர் 'அட்மிட்' குதிரை உதைத்ததில் பராமரிப்பாளர் 'அட்மிட்'
குதிரை உதைத்ததில் பராமரிப்பாளர் 'அட்மிட்'
குதிரை உதைத்ததில் பராமரிப்பாளர் 'அட்மிட்'
குதிரை உதைத்ததில் பராமரிப்பாளர் 'அட்மிட்'
ADDED : ஜூலை 11, 2024 12:06 AM
எழும்பூர், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 25. இவர், எழும்பூரில் உள்ள போலீசாருக்கான குதிரைப் படையில் பராமரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, புதிதாக வாங்கப்பட்ட குதிரைக்கு பயிற்சி அளித்தார். அப்போது, திடீரென குதிரை எட்டி உதைத்ததில், அருண்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை சக ஊழியர்கள் மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.