/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆபத்தான மின்பெட்டி அமைந்தகரையில் அச்சம் ஆபத்தான மின்பெட்டி அமைந்தகரையில் அச்சம்
ஆபத்தான மின்பெட்டி அமைந்தகரையில் அச்சம்
ஆபத்தான மின்பெட்டி அமைந்தகரையில் அச்சம்
ஆபத்தான மின்பெட்டி அமைந்தகரையில் அச்சம்
ADDED : ஜூலை 11, 2024 12:06 AM

அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை பகுதியில், அருணாச்சலபுரம் தெரு உள்ளது. இங்குள்ள ஏராளமான வீடுகளில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், வீடுகளுக்கு மத்தியில், மின்வாரியத்தின் மின் பகிர்மான பெட்டி உள்ளது. மின் இணைப்பில், அடிக்கடி பழுது ஏற்படுவதால், பெட்டியில் கதவு உடைந்து காணாமல் போனது. தற்போது திறந்தவெளியில் உள்ள பெட்டியில், மின்வடங்களில் அடிக்கடி தீப்பொறி வெளிவருகிறது.
குழந்தைகள் விளையாடும் இடத்தில் இதுபோன்ற நிலை இருப்பதால், மழைக்காலத்திற்கு முன், பெட்டியை சீரமைக்க வேண்டும்.