/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.4 கோடியில் குளம் சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு ரூ.4 கோடியில் குளம் சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
ரூ.4 கோடியில் குளம் சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
ரூ.4 கோடியில் குளம் சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
ரூ.4 கோடியில் குளம் சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 20, 2024 01:36 AM

முடிச்சூர்:தாம்பரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, முடிச்சூர் ஊராட்சி ரங்கா நகரில் பழமையான குளம் உள்ளது.
பராமரிப்பில்லாததால் குப்பை, பிளாஸ்டிக் தேங்கி, நாசமாகிவிட்ட இக்குளத்தை சி.எம்.டி.ஏ., நிதி, 4.2 கோடி ரூபாய் செலவில், சீரமைக்கும் பணி, மார்ச் மாதம் துவங்கியது.
துார்வாரி ஆழப்படுத்துதல், நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, முதியோருக்கான உடற்பயிற்சி கருவிகள், வாகன நிறுத்தம், இருக்கை, பயோடாய்லெட், நடைபாதை, மிதக்கும் நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இப்பணிகள் துவங்கி, மந்தமாக நடந்து வருகின்றன. தற்போது, 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன.
பருவமழைக் காலம் துவங்கியதும், இக்குளம் நிரம்பி, பணிகள் பாதிக்கப்படுவதோடு, திட்டமும் முடங்கும்.
அதனால், கூடுதல் பணியாளர்களை நியமித்து, மழைக்கு முன், இக்குளத்தை சீரமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.