ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்
ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்
ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 20, 2024 01:38 AM

கோவிலம்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம் சுற்றுப்பகுதியில், பள்ளிக்கரணை போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
தொடர் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், 36, என்பதும், குட்கா, பான் மசாலா பொருட்களை வாங்கி பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், முருகேசனை கைது செய்தனர்.