/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொலையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' கொலையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
கொலையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
கொலையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
கொலையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 12, 2024 12:29 AM
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, இரட்டை குழி சந்தை சேர்ந்தவர் தினேஷ், 24. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் மாலை, மூவர் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், தினேஷுக்கு, ரவுடி சந்தோஷ் என்பவருக்கும், கடந்தாண்டு, செப்., 26ம் தேதி, கஞ்சா தொழில் போட்டியில் தகராறு ஏற்பட்டது. சந்தோைஷ ஆறு பேர் கும்பல் வெட்டியது.
கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்து, தினேஷ் உட்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்பகையாக மாறியது. ஆத்திரத்தில் இருந்த சந்தோஷ், தன் கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து, தினேைஷ கொலை செய்தது தெரியவந்தது. இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல், முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கொலையை தடுக்க தவறிய கொருக்குப்பேட்டை இன்ஸ்பெக்டர் யுவராஜை, பணியிடை நீக்கம் செய்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
மூவர் சரண்
தினேஷ் கொலை வழக்கில், கொருக்குப்பேட்டை, பெருமாள் கோவில் தோட்டம் 1வது தெருவைச் சேர்ந்த சந்தோஷ், 22, என்பவரை ஏற்கனவே கைது செய்தனர்.
தலைமறைவான ஏழு பேரை தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கில் சிறுவன் உட்பட மூவர் நேற்று போலீசில் சரணடைந்தனர். மற்ற நான்கு பேரை தேடி வருகின்றனர்.