/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'டாஸ்மாக்'கில் அடி தடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை 'டாஸ்மாக்'கில் அடி தடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை
'டாஸ்மாக்'கில் அடி தடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை
'டாஸ்மாக்'கில் அடி தடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை
'டாஸ்மாக்'கில் அடி தடி தகராறு பி.எஸ்.எப்., வீரர் குத்திக்கொலை
ADDED : ஜூன் 12, 2024 12:28 AM

வாலாஜாபாத், தாம்பரம், வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்தவர் கனகசபாபதி 24; திருமணமாகாதவர். இவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், பி.எஸ்.எப்., எனும் எல்லை பாதுகாப்பு படையில் பணியில் சேர்ந்தார். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் பணியாற்றி வந்தவர், 40 நாட்கள் விடுப்பில் கடந்த 24ம் தேதி சொந்த ஊர் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, கருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நண்பரான ஆனந்தராஜ், 25, என்பவருடன், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் இயங்கும் 'டாஸ்மாக்' மதுபானக்கடைக்கு சென்றார்.
அங்கே மது அருந்திக் கொண்டிருந்தபோது, ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், 55, என்பவருடன் ஆனந்தராஜுக்கு தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக, ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த பழனி 44, வெங்கடேசன், 35, ராஜேஷ், 40, அருண், 44, ஆகியோர் சேர்ந்து, ஆனந்தராஜ் மற்றும் கனகசபாபதியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், கனகசபாபதிக்கு கத்திக்குத்து விழுந்தது.
படுகாயம் அடைந்த இருவரும், அங்கிருந்து 'ராயல் என்பீல்டு' புல்லட் வாகனத்தில் தப்பினர். அப்போது, இருசக்கர வாகனத்தை கனகசபாபதி ஓட்டி வர அதிக ரத்தப்போக்கு காரணமாக ஊத்துக்காடு-, புத்தகரம் இணைப்பு சாலை அருகே, கனகசபாபதி மயக்கமுற்று விழுந்தார்.
அப்பகுதியினர் அவர்களை மீட்டு, காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் கனகசபாபதி இறந்தது தெரிய வந்தது.
ஆனந்தராஜ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த வாலாஜாபாத் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷ், அருண், பழனி, வெங்கடேசன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.