/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடனை திருப்பி தராமல் பெண்ணை மிரட்டிய கணவன், மனைவி கைது கடனை திருப்பி தராமல் பெண்ணை மிரட்டிய கணவன், மனைவி கைது
கடனை திருப்பி தராமல் பெண்ணை மிரட்டிய கணவன், மனைவி கைது
கடனை திருப்பி தராமல் பெண்ணை மிரட்டிய கணவன், மனைவி கைது
கடனை திருப்பி தராமல் பெண்ணை மிரட்டிய கணவன், மனைவி கைது
ADDED : மார் 13, 2025 12:51 AM
எண்ணுார், மார்ச் 13-
எண்ணுார் முகத்துவாரக்குப்பத்தை சேர்ந்தவர் சரண்யா, 32. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவருடைய கணவர் சதீஷ், சில ஆண்டுகளுக்குமுன் விபத்தில் இறந்து விட்டார்.
சரண்யாவிற்கு விபத்து காப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. அதை வைத்து, பிள்ளைகளை கவனித்து வருவதுடன், துணி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த காந்திகுமார், 35, மனைவி சத்யராணி, 33, என்பவருடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின், அவசர தேவைக்காக, சரண்யாவிடம் இருந்து சத்யராணி, கடனாக 10 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார்.
வாங்கிய கடனை திருப்பி தராமல், சத்யராணி ஏமாற்றி வந்துள்ளார். அவரது கணவர் காந்திகுமார், பணம் கேட்ட சரண்யாவை மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த சரண்யா, எண்ணுார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, காந்திகுமார் - சத்யராணி இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.