/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்' 'மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்'
'மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்'
'மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்'
'மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்'
ADDED : ஜூன் 17, 2024 02:21 AM

சென்னை:ஜம்பு தீவு பிரகடனம் நினைவு நாள் மற்றும் தமிழகத்தில் அறியப்படாத தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து, ஆய்வு செய்த மாணவ - மாணவியருக்கு பாராட்டு விழா, சென்னை கவர்னர் மாளிகையில் நடந்தது.
சுதந்திர போரில் வழக்கறிஞர்களின் பங்கு' என்ற தலைப்பில், நுால் வெளியிடப்பட்டது. ஆய்வு செய்த மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி, கவர்னர் ரவி பேசியதாவது:
கடந்த 1801ம் ஆண்டு, ஜம்பு தீவு பிரகடனம் வாயிலாக, ஆங்கிலேயர்களை எப்படி விரட்ட வேண்டும் என, மருது சகோதரர்கள் அறிந்திருந்தனர்.
ஜாதி, மதம் கடந்து ஆங்கிலேயர்களை எப்படி வெளியேற்றுவது என போராடியது தான், முதல் சுதந்திர போராட்டம். அப்படியான போராட்டங்களால் தான், இன்று நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். உண்மையான சுதந்திர போராட்டம் மறைக்கப்பட்டு வருகிறது. அதை வெளிக்கொண்டு வர வேண்டும்.
ஆங்கிலேயர்கள், கட்டப்பொம்மனை துாக்கிலிட்ட பாஞ்சாலங்குறிச்சி நகர் முழுதையும் தரைமட்டம் ஆக்கினர். அங்குள்ள மண் வளத்தை கெடுக்க, உப்பு துாவினர். மொழியாலும், மாநிலத்தாலும் பிரிந்து உள்ளோம்.
நாம் ஒன்றிணைந்து வாழ வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.