/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போரூர் -- குன்றத்துார் சாலையில் ஷேர் ஆட்டோக்களால் நெரிசல் போரூர் -- குன்றத்துார் சாலையில் ஷேர் ஆட்டோக்களால் நெரிசல்
போரூர் -- குன்றத்துார் சாலையில் ஷேர் ஆட்டோக்களால் நெரிசல்
போரூர் -- குன்றத்துார் சாலையில் ஷேர் ஆட்டோக்களால் நெரிசல்
போரூர் -- குன்றத்துார் சாலையில் ஷேர் ஆட்டோக்களால் நெரிசல்
ADDED : ஜூன் 17, 2024 02:20 AM

போரூர்:மவுன்ட் -- பூந்தமல்லி சாலை மற்றும் குன்றத்துார் -- வளசரவாக்கம் ஆற்காடு சாலை ஆகியவற்றை இணைக்கும் நான்கு முனை சந்திப்பு உள்ளது.
இந்த சந்திப்பை சுற்றி ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அரங்கேறி வருகின்றன.
இதில், போரூர் சந்திப்பில் இருந்து குன்றத்துார் செல்லும் ஆற்காடு சாலையில், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை உள்ளது.
எனவே, போரூர் -- குன்றத்துார் சாலையில் உள்ள வாகன ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.