/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கர்நாடகாவில் கனமழை காய்கறி வரத்து பாதிப்பு கர்நாடகாவில் கனமழை காய்கறி வரத்து பாதிப்பு
கர்நாடகாவில் கனமழை காய்கறி வரத்து பாதிப்பு
கர்நாடகாவில் கனமழை காய்கறி வரத்து பாதிப்பு
கர்நாடகாவில் கனமழை காய்கறி வரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 20, 2024 12:49 AM
சென்னை:சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் வரத்து உள்ளது.
ஆடி மாதம் துவங்கினால், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் குறையும் என்பதால், விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கர்நாடகா மற்றும் தற்போது ஆந்திராவில் பெய்துவரும் கன மழையால், அங்கு அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்தும் குறைந்து உள்ளது.
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் 120க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரத்து இருந்த நிலையில், தற்போது, 50 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது.
இதனால், ஆடி மாதத்திலும், பல வகை காய்கறிகள் விலை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது.
ஒரு கிலோ தக்காளி - 70, பெரிய வெங்காயம் - 60, சின்ன வெங்காயம் - 80, கேரட் -70, பீட்ரூட் - 90, கோஸ் - 50, பீன்ஸ் - 80, வெண்டைக்காய் - 40, கத்தரிக்காய் - 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கர்நாடகாவில் காய்கறிகள் வரத்து அதிகரித்தால், விலை கட்டுக்குள் வரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.