Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (21.07.2024) சென்னை

இன்று இனிதாக (21.07.2024) சென்னை

இன்று இனிதாக (21.07.2024) சென்னை

இன்று இனிதாக (21.07.2024) சென்னை

ADDED : ஜூலை 21, 2024 01:03 AM


Google News
ஆன்மிகம்

 பட்டினத்தார் திருநட்சத்திர விழா

தியாகேச பெருமாள் கோவிலில் இருந்து, பட்டினத்தார் கோவில் வந்தடைதல் நிகழ்வு - காலை 7:00 மணி. அதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகள். இடம்: பட்டினத்தார் கோவில், திருவொற்றியூர் குப்பம்.

 பார்த்தசாரதி கோவில்

பார்த்தசாரதி பெருமாள், ஆளவந்தார் மண்டப திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. ஆளவந்தார் ஆஸ்தானம் - -இரவு 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

பவுர்ணமியை முன்னிட்டு கபாலீஸ்வரருக்கு திரட்டுப்பால் சார்த்துதல்- - மாலை 5:00 மணி. சந்திரசேகரர் திருவீதி உலா - -மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 குருவாயூரப்பன் கோவில்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - -காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.

 ஆடி பவுர்ணமி

அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.

 குருபூர்ணிமா

சத்யம் யோகா டிரஸ்ட் சார்பில் குருபூர்ணிமா - -காலை 7:00 மணி: குசலாம்பாள் கல்யாண மண்டபம், சேத்துப்பட்டு.

 எட்டீஸ்வரர் கோவில்

மெய்ப்பொருள் நாயனார் உழவாரப்பணி மன்றத்தின் பணி - காலை 6:00 மணி முதல். இடம்: எட்டீஸ்வரர் கோவில், மேல் அயனம்பாக்கம், வானகரம்.

 உபன்யாசம்

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் நுாற்றாண்டு அறக்கட்டளை சார்பில், நன்னிலம் கிருஷ்ண கனபாடிகளின் உபன்யாசம் - -மாலை 6:15 மணி. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர்.

 உபன்யாசம்

எம்.வி.பத்மநாபாச்சாரியாரின் பாரத ரகசியங்கள் -- மாலை 6:00 மணி. இடம்: ராம் சீதா ஹால், 2வது தெரு, எஸ்.பி.ஐ., காலனி, ராஜகீழ்ப்பாக்கம்.

 வாய்ப்பாட்டு

ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் வாய்ப்பாட்டு - மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 பவுர்ணமி பூஜை

மாலை 6:00 மணிக்கு பவுர்ணமி அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு யாகம், தீபஜோதி. இடம்: நாகேஸ்வரி அம்மன் கோவில், முத்துரங்கம் பூங்கா, மேற்கு தாம்பரம்.

 பவானி அம்மன் கோவில்

ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிேஷகம், பொங்கல் வைத்து வழிபாடு - காலை 8:00 மணி. இடம்: பவானி அம்மன் கோவில், மூவேந்தர் நகர், பம்மல்.

 பழைய பெரிய பாளையத்தம்மன்

ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிேஷகம் - காலை 8:00 மணி. இடம்: அருள்மிகு பழைய பெரிய பாளையத்தம்மன் கோவில், கல்யாணிபுரம், பம்மல்.

பொது

 நுால் வெளியீடு

பத்துப்பாட்டு உரைநுால் வெளியீட்டு விழா - காலை 10:00 மணி. இடம்: கன்னிமாரா நுாலகம், 2வது தளம், பாந்தியன் சாலை, எழும்பூர்.

 நாடகம்

பி.பி.ஆர்., அசோசியேட்ஸின், 'டிவி' வரதராஜன் குழுவினரின் நாடகம் - மாலை 6:30. இடம்: வாணி மஹால், ஓபுல் ரெட்டி அரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.

 கைவினை கண்காட்சி

பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us